
உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழலின் மேம்பாட்டுடன், நிங் சியாவில் தானிய விளைச்சல் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போது, நபர்வாரி தானிய விளைச்சல், 500 கிலோகிராமுக்கு மேலாகும். 2007ம் ஆண்டு, நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, சுமார் 8 ஆயிரத்து 900 கோடி யுவானை எட்டியது.
பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன், நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேச அரசு, சிறுபான்மைத் தேசிய இன ஊழியர்களுக்குப் பயிற்சியளித்து, சிறுபான்மைத் தேசிய இனக் கல்வி இலட்சியத்தை வளர்க்கும் ஆற்றலை வலுப்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, ஹுய், ஹான் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனத்தவர்கள் சுமூகமாகப் பழகி, அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இவை எல்லாம், சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களில் தன்னாட்சி அமைப்பு முறையைச் செயல்படுத்துவதுடன் பிரிக்கப்பட முடியாதது என்று சீன நடுவண் தேசிய இனப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Yang Shengmin சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது,
சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசத்திலான தன்னாட்சி அமைப்பு முறையின்படி, சிறுபான்மைத் தேசிய இனங்கள், தன்னாட்சி உரிமைகளைச் செயல்படுத்தலாம். அத்துடன், அவை, இந்த வடிவத்தின் மூலம், நாட்டின் சட்டமியற்றல் மற்றும் நிர்வாகத்தில் கலந்து கொள்ளலாம். இந்த அமைப்பு முறை, பல்வேறு தேசிய இனங்களை சமமாகவும் கூட்டாகவும் வளரச் செய்து, செழுமையாகவும் வளர்ச்சியாகவும் மாறச் செய்யும். அத்துடன், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அமைதியை நிலைநிறுத்தும் என்று அவர் கூறினார். 1 2 3 4 5
|