
சீனாவின் வடமேற்கு உட்புற பகுதியிலான நிங் சியா, சீனாவின் ஒரே ஒரு ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசமாகும். இங்கு 20 இலட்சம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இது, சீனாவில் மணற்காற்றால் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்ற பிரதேசங்களில் ஒன்றாகும்.
கடந்த சில ஆண்டுகளில், நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேச அரசு, மணற்காற்றைத் தடுத்து, பாலைவனமாவதை கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் மரம் நடுவதை ஊக்குவித்தது. நீர் சேமிப்பு வசதிகளைக் கட்டியமைப்பதற்காக, அதிகமான ஒதுக்கீடு செய்துள்ளது. விளை நிலங்கள் மீண்டு காடுகளாக மாற்றப்படுவது உள்ளிட்ட பல உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல் திட்டப்பணிகளைச் செயல்படுத்தியுள்ளது. இப்பிரதேசத்திலான பாலைவன பரப்பளவு, 1970ம் ஆண்டுகாலத்தில் இருந்த 16 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டரிலிருந்து தற்போது 11 இலட்சம் ஹெக்டராக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிலங்கள் பாலைவனமாகும் போக்கு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனத் தேசிய வனத்தொழில் பணியகத்தின் பாலைவனக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அதிகாரி Wang Jun கூறியதாவது,
4 முதல் 5 ஆண்டுகால கட்டுப்பாட்டின் மூலம், தற்போதைய தாவர செடிகொடிகளின் பரவல் விகிதம், சுமார் 70 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பயன், மிகவும் நன்றாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
1 2 3 4 5
|