• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-29 23:06:04    
குவாங் சி பெய் பு வளைகுடாவின் விரைவான வளர்ச்சி

cri

துறைமுகங்கள், இங்குள்ள வளர்ச்சிக்கான முக்கிய வாயில்களாகும். பெய் பு வளைகுடாவின் beihai, qinzhou, fangchenggang ஆகிய துறைமுகங்கள், ஆசியான் நாடுகளுடன் கடல் வழி வர்த்தகம் செய்கின்ற முக்கிய மூன்று துறைமுகங்களாக மாறியுள்ளது.

Fangcheng என்ற துறைமுகம், சீனாவின் யுன்னான், குய் ச்சோ, சி ச்சுவான் ஆகிய மாநிலங்களை சார்ந்திருந்து, கிழக்கில் குவங்து, ஹாய் நான், ஹாங்காங், மக்கௌ ஆகிய இடங்களோடு வணிக தொடர்பு கொண்டுள்ளது. மேற்கில், வியட்நாமுடன் இணைந்தும், தெற்கில் பெய் பு வளைகுடாவுடனும் தொடர்பு ஏற்படுத்தியுள்ளது. எதிர்நோக்குகிறது. இது, சீன பெருநிலப்பகுதி, ஆசியான் நாடுகளில் நுழைக்கின்ற வாயிலாகும். இது, இட அமைவில் மேம்பாடு மிக்கதாக உள்ளது.

தற்போது, Fangcheng துறைமுகம், 20 ஆண்டுகளுக்கு முந்தைய சிறிய துறைமுக கட்டுமானத்திலிருந்து, 35 கப்பல் தங்குமிடங்களை கொண்ட பெரிய துறைமுக வணிகக் குழுமமாக மாறியுள்ளது. அது ஓராண்டு கையாளும் சரக்கு தொகை,4 கோடி டன்னைத் தாண்டியது. 100க்கு மேலான நாடுகளின் 250 துறைமுகங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. இக்குழுமத்தின் துணை மேலாளர் li qinru கூறியதாவது,

தற்போது, பெய் பு வளைகுடா, கிழக்கு பகுதியையும் மேற்கு பகுதியையும் இணைக்கின்ற முக்கிய மேடையாகும். இது, சீன-ஆசியான் வர்த்தகத்தை இணைக்கின்ற முக்கிய இணைப்பாகும். 2006ம் ஆண்டுக்கு முன்,Fangcheng துறைமுகத்தில் சரக்கு கையாளப்படும் திறன், ஆண்டுக்கு 10 இலட்சம் டன் அதிகரித்தது. 2006ம் ஆண்டை விட, 2007ம் ஆண்டு 30 இலட்சம் டன் அதிகரித்தது. இவ்வாண்டு இன்னும் சுமார் ஒரு கோடி டன் அதிகரித்து. அதிகரிப்பு வேகம் பொதுவாக விரைவாகியுள்ளதை, இது குறிக்கிறது. இது, நாட்டின் தற்போதைய வளர்ச்சி போக்குடன் தொடர்புடையது என்றார் அவர்.

1 2 3 4 5