இத்துறைமுக நகரங்களின் இட மேம்பாடுகளை மேலும் சிறந்த முறையில் பயன்படுத்தும் வகையில், அங்குள்ள பாதை மற்றும் துறைமுகக் கட்டுமானத்தை குவாங் சி விரைவுபடுத்தி வருகிறது. குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் போக்குவரத்து பிரிவின் தலைவர் huang huakuan கூறியதாவது,
நவீன போக்குவரத்தை கட்டியமைப்பது என்ற குறிக்கோளின்படி, வெளிநாட்டுக்கு செல்கின்ற பாதைகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தியுள்ளோம். திட்டப்படி, 2010ம் ஆண்டில் குவாங் சியின் உயர்வேக பாதையின் நீளம் மூவாயிரம் கிலோமீட்டரை தாண்டும் என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளாக, குவாங் சி ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, கடலோர பிரதேசத்தின் 63 அடிப்படை கட்டுமானத் திட்டப்பணிகளை துவக்கியது. எதிர்காலத்தில், liuzhou,wuzhou,baise ஆகிய நகரங்களின் விமான நிலையங்களும் மேம்படுத்தப்படும். 2010ம் ஆண்டில், nanning Guilin நகரங்களை மையமாக கொண்ட விமான போக்குவரத்து அமைப்பு முறை உருவாக்கப்படும். அப்போது, பெய் பு வளைகுடா பொருளாதார மண்டலத்தில், வலிமையான, நவீனமயமான கப்பல் மற்றும் தரை போக்குவரத்து வலைப்பின்னல் உருவாகும். 1 2 3 4 5
|