கலை........சந்திர நாட்காட்டி என்ன என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். வேளாண்மையில், விளைநிலம் உழுவுதல், விதைத்தல், பயிர்கள் வளர்ப்பு, அமோக அறுவடை பெறுதல் போன்ற பணிகள் நிறைவேற்றும் காலங்களின் படி சந்திர நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
தமிழன்பன்.......இது தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவை ஒத்த விளக்கம் போல் இருக்கின்றதே.
கலை........ஆமாம். வசந்த விழா காலத்தில் உழவு வேலை துவங்குவதற்கு முன் வருகிறது. அதற்குமுன் சீனா குளிர் காலத்தில் இருக்கும். ஆகவே விளைநிலத்தில் வேலை இல்லை. மக்கள் வீட்டில் வாளா இருக்கின்றனர். ஆண்டின் அமோக அறுவடையை எதிர்பார்க்கும் வகையில் வசந்த விழாவை அவ்வாண்டின் தொடக்கத்தில் மாபெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.
தமிழன்பன்.......இந்த விழாவை கொண்டாடுவதில் எந்த மாதிரி விடயங்களை நிறைவேற்ற வேண்டும்?
கலை........வசந்த நாட்காட்டியின் படி குளிர்கால திங்களின் 23வது
முதல் 30 வரையான நாட்கள் வசந்த விழாவை வரவேற்கும் நாட்களாகும். அப்போது மக்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தூய்மையான சூழ்நிலையுடன் விழாவை வரவேற்பது சீன மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கமாகும்.
1 2 3 4 5 6 7 8 9 10
|