கலை........வசந்த விழாவின் முதல் நாளில் மக்கள் அனைவரும் புதிய ஆடையை அணிந்து மூத்தவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பர். குழந்தைகளுக்கு அப்போது விழாவைக் கொண்டாடும் விதமாக பரிசு பணமாக வழங்கப்படும்.
தமிழன்பன்....... வசந்த விழா கொண்டாடப்படும் விடுமுறையான தங்க வாரத்தில் மக்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களிடம் சென்று பரஸ்பரம் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பர்.
கலை........புத்தாண்டின் முதல் 5 நாட்களில் வசதியான இடங்களில் குதூகலகூட்டங்கள் நடைபெறும். அப்போது மக்கள் தங்கள் வாழ்வில் வியக்கத்தக்க பல்வகை சிறந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு இரசிக்கலாம்.
தமிழன்பன்.......குதூகலகூட்டங்கள் நடைபெறும் இடங்களில் பல்வகை தனிச்சிறப்பியல்பு கொண்ட சிற்றுண்டிகள் விற்கப்படும்.
கலை........அதேவேளையில் பல்வகை பாரம்பரிய சிறப்புமிக்க பொம்மைகளும் விளையாட்டுப் பொருட்களும் விற்கப்படுவதையும் காணலாம்.
தமிழன்பன்.......சரி கலை இப்போது நிகழ்ச்சி நிறைவடையும் நேரம் ஆகிவிட்டதே.
கலை........ நேயர்களே இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் வசந்த விழா பற்றி முக்கியமாக எடுத்து கூறினோம்.
தமிழன்பன்.......நாங்கள் அடுத்த வாரமும் சீனாவில் கொண்டாடப்படும் விழாக்கள் பற்றி தொடர்ந்து விவாதிப்போம்.
கலை........வணக்கம் நேயர்களே. 1 2 3 4 5 6 7 8 9 10
|