• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-08 09:13:37    
வினாக்களுக்கு விடையளிப்பது

cri

     

 

கலை........மகிழ்ச்சி. வசந்த விழா சீன மக்கள் கொண்டாடும் மிக பிரமாண்டமான மிக விறுவிறுப்பான பாரம்பரிய விழாவாகும். அதன் வரலாறு நீண்டகாலம் உடையது. சுமார் 4 ஆயிரம் ஆண்டு கால வளர்ச்சியுடன் சீன மக்கள் வசந்த விழாவைக் கொண்டாடும் போது அதன் அம்சங்களை செழுமையாக்கியுள்ளனர்.

தமிழன்பன்.......சற்று விபரமாக கூறுங்களே.

கலை........சந்திர நாட்காட்டி என்ன என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். வேளாண்மையில், விளைநிலம் உழுவுதல், விதைத்தல், பயிர்கள் வளர்ப்பு, அமோக அறுவடை பெறுதல் போன்ற பணிகள் நிறைவேற்றும் காலங்களின் படி சந்திர நாட்காட்டி உருவாக்கப்பட்டது.

தமிழன்பன்.......இது தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவை ஒத்த விளக்கம் போல் இருக்கின்றதே.

கலை........ஆமாம். வசந்த விழா காலத்தில் உழவு வேலை துவங்குவதற்கு முன் வருகிறது. அதற்குமுன் சீனா குளிர் காலத்தில் இருக்கும். ஆகவே விளைநிலத்தில் வேலை இல்லை. மக்கள் வீட்டில் வாளா இருக்கின்றனர். ஆண்டின் அமோக அறுவடையை எதிர்பார்க்கும் வகையில் வசந்த விழாவை அவ்வாண்டின் தொடக்கத்தில் மாபெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.

தமிழன்பன்.......இந்த விழாவை கொண்டாடுவதில் எந்த மாதிரி விடயங்களை நிறைவேற்ற வேண்டும்?

கலை........வசந்த நாட்காட்டியின் படி குளிர்கால திங்களின் 23வது

முதல் 30 வரையான நாட்கள் வசந்த விழாவை வரவேற்கும் நாட்களாகும். அப்போது மக்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தூய்மையான சூழ்நிலையுடன் விழாவை வரவேற்பது சீன மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கமாகும்.

தமிழன்பன்.......சுத்தம் செய்யும் நாட்கள் கடந்த பின் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

கலை........விழாவிற்கு சுமார் பத்து நாட்களுக்கு முன் மக்கள் பொருட்களை எல்லாம் வாங்கிகொள்ள வேண்டும். வாத்து, மீன்கள், இறைச்சி, தேயிலை, மிட்டாய், முதலிய சிற்றுண்டிகளை தாராளமாக வாங்குவர். விழாக் கொண்டாட்ட நாட்களில் நண்பர்களை சென்று பார்ப்பதற்கு தேவையான அன்பளிப்புக்கள், குழந்தைகளுக்கான புதிய ஆடைகள் ஆகியவற்றையும் அப்போதே வாங்கி வைத்துக் கொள்வர்.

தமிழன்பன்.......இது தமிழகத்தில் உறவினர்களை பார்க்க சென்று கண்டு மகிழும் காணும் பொங்கல் விவாவை போன்று உள்ளதே சரி. அப்புறம், வசந்த விழாவை எப்படி கொண்டாட வேண்டும்?

கலை........வசந்த விழா மங்கல விழாவாக கருதப்படுகின்றது. குடும்பத்தினர்கள் அனைவரும் தொலைவிலிருந்தாலும் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும். விழா முந்திய நாளிரவு அதாவது சந்திர நாட்காட்டியின் குளிர்கால திங்கள் 30வது நாளிரவு விழாவின் முன்தினமாக அழைக்கப்படுகின்றது. குடும்பத்தினர் அனைவரும கூடி மகிழ்ந்திருக்கும் இரவாகவும் இது அழைக்கப்படுகின்றது. புத்தாண்டு துவங்கும் அந்த முந்தினத்தில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் ஒன்றாக கூடி விருந்து உட்கொண்டு உடன்பிறந்த சகோதரபாச உணர்வை அனுபவிக்க வேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10