• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-08 09:13:37    
வினாக்களுக்கு விடையளிப்பது

cri

    

 

தமிழன்பன்.......புத்தாண்டின் முதல் நாளின் போது அல்லது புத்தாண்டை குறிக்கும் மணி ஒலிக்கப்படும் போது சாலைகள் எங்கும் பட்டாசு வெடிக்கப்படும். அனைத்து குடும்பங்களிலும் மகிழ்ச்சி நிறையும். அப்படித்தானே.

கலை........பொதுவாக தொலைக் காட்சியில் மணி ஒலிக்கப்படும் காட்சி ஒளிப்பரப்பப்படும் போது மக்கள் அனைவரும் சாலைக்கு வந்து பட்டாசு வெடித்து மகிழ்வர். இது புத்தாண்டு நாள் தொடங்கும் முதலாவது நேரம் அதாவது பழைய ஆண்டின் கடைசி நாள் முடிவடைந்த நள்ளிரவில் இவை நிகழும்

தமிழன்பன்.......இது பற்றி எனக்கு அனுபவம் உண்டு. நான் பெய்ஜிங்கில் ஒரு முறை வசந்த விழா கொண்டாடி இருக்கிறேன். புத்தாண்டு தொடங்கும் நள்ளிரவு பட்டாசு வெடித்து மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்றேன்.

கலை........வசந்த விழாவின் முதல் நாளில் மக்கள் அனைவரும் புதிய ஆடையை அணிந்து மூத்தவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பர். குழந்தைகளுக்கு அப்போது விழாவைக் கொண்டாடும் விதமாக பரிசு பணமாக வழங்கப்படும்.

தமிழன்பன்....... வசந்த விழா கொண்டாடப்படும் விடுமுறையான தங்க வாரத்தில் மக்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களிடம் சென்று பரஸ்பரம் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பர்.

கலை........புத்தாண்டின் முதல் 5 நாட்களில் வசதியான இடங்களில் குதூகலகூட்டங்கள் நடைபெறும். அப்போது மக்கள் தங்கள் வாழ்வில் வியக்கத்தக்க பல்வகை சிறந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு இரசிக்கலாம்.

தமிழன்பன்.......குதூகலகூட்டங்கள் நடைபெறும் இடங்களில் பல்வகை தனிச்சிறப்பியல்பு கொண்ட சிற்றுண்டிகள் விற்கப்படும்.

கலை........அதேவேளையில் பல்வகை பாரம்பரிய சிறப்புமிக்க பொம்மைகளும் விளையாட்டுப் பொருட்களும் விற்கப்படுவதையும் காணலாம்.

தமிழன்பன்.......சரி கலை இப்போது நிகழ்ச்சி நிறைவடையும் நேரம் ஆகிவிட்டதே.

கலை........ நேயர்களே இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் வசந்த விழா பற்றி முக்கியமாக எடுத்து கூறினோம்.

தமிழன்பன்.......நாங்கள் அடுத்த வாரமும் சீனாவில் கொண்டாடப்படும் விழாக்கள் பற்றி தொடர்ந்து விவாதிப்போம்.

கலை........வணக்கம் நேயர்களே.

வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். இந்நிகழ்ச்சி மூலம் உங்கள் வினாக்களுக்கு விடையளிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அறிவிப்பாளர்கள் தமிழன்பன், தி. கலையரசி.

தமிழன்பன்.......இவ்வாண்டு சிறுநாயக்கன்பட்டி கே வேலுசாமி, சேந்த மங்கலம் எஸ் எம் இரவிச்சந்திரன், பேளுக் குறிச்சி கே செந்தில், விழுப்புறம் இளங்கோவன் போன்ற பல நண்பர்கள் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் வினாக்கள் கேட்டு கடிதம் எழுதி பங்கு எடுத்தனர். நன்றிகள். தொடர்ந்து நேயர்கள் வினாக்களை அனுப்பி இந்நிகழ்ச்சியில் பங்கெடுக்க கேட்டுகொள்கின்றோம்.

கலை........ இப்போது பல நண்பர்கள் சீனா எப்படி அதன் விழாக்களை கொண்டாடுகிறது என்பதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர்.

தமிழன்பன்.......பொதுவாக ஒரு தேசம் அதன் விழாக்களை கொண்டாட்டும் வடிவம் தனிச்சிறப்பியல்பு மிக்கது.

கலை........ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் ஈரோடு வெ ராஜேஸ்வரி, சென்னை 44 கெ விக்னேஷ் இருவரும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கிறோம்.

தமிழன்பன்.......அவர்கள் என்ன கேள்வி கேட்டுள்ளனர்?

கலை........ சீனாவில் எத்தனை விழாக்கள் இருக்கின்றன? அவை ஏன் சந்திரனோடு இணைந்துள்ளன?

தமிழன்பன்.......இது பற்றி விடை அளிப்பதில் உங்களை பொறுத்தவரை இன்னல்கள் இல்லை. அப்படிதானே.

கலை........நீங்கள் சொன்னது பாதி சரி பாதி சரியில்லை. சந்திரனுடன் தொடர்புடைய விழாக்களை விளக்கி கூற வேண்டுமானால் நாம் முதலில் சந்திர நாட்காட்டி பற்றி விளக்கம் செய்ய வேண்டும்.

தமிழன்பன்.......சந்திர நாட்காட்டியின் படி, சீனாவின் பாரம்பரிய விழாக்கள் மதம், வழிப்பாடு, கொண்டாட்டம் முதலியவையுடன் இணைக்கின்றன.

கலை........ அடிப்படையில் சொன்னால் விழா பண்பாடு என்பது சமூகத்தின் ஒரு வகை வெளிப்பாடாகும்.

தமிழன்பன்.......சீனாவில் விழாக்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி சமூக வாழ்க்கையுடன் எப்படி தொடர்புடையதாக உள்ளது?

கலை........விழாக்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி மனித சமூகம் குறிப்பிட்ட காலத்தில் வளர்ந்த பின் ஏற்பட்ட விளைவுகளாகும்.

தமிழன்பன்.......நீண்டகால வரலாற்றில் இடம்பெற்ற புகழ்பெற்ற கவிஞர்களும், எழுத்தாளர்களும் விழாக்களை பற்றி படைத்த கவிதைகளும் கட்டுரைகளும் மக்களிடையில் பரந்த அளவில் பரவின.

1 2 3 4 5 6 7 8 9 10