
தமிழன்பன்.......சுத்தம் செய்யும் நாட்கள் கடந்த பின் மக்கள் என்ன செய்ய வேண்டும்?
கலை........விழாவிற்கு சுமார் பத்து நாட்களுக்கு முன் மக்கள் பொருட்களை எல்லாம் வாங்கிகொள்ள வேண்டும். வாத்து, மீன்கள், இறைச்சி, தேயிலை, மிட்டாய், முதலிய சிற்றுண்டிகளை தாராளமாக வாங்குவர். விழாக் கொண்டாட்ட நாட்களில் நண்பர்களை சென்று பார்ப்பதற்கு தேவையான அன்பளிப்புக்கள், குழந்தைகளுக்கான புதிய ஆடைகள் ஆகியவற்றையும் அப்போதே வாங்கி வைத்துக் கொள்வர்.
தமிழன்பன்.......இது தமிழகத்தில் உறவினர்களை பார்க்க சென்று கண்டு மகிழும் காணும் பொங்கல் விவாவை போன்று உள்ளதே சரி. அப்புறம், வசந்த விழாவை எப்படி கொண்டாட வேண்டும்?
கலை........வசந்த விழா மங்கல விழாவாக கருதப்படுகின்றது. குடும்பத்தினர்கள் அனைவரும் தொலைவிலிருந்தாலும் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும். விழா முந்திய நாளிரவு அதாவது சந்திர நாட்காட்டியின் குளிர்கால திங்கள் 30வது நாளிரவு விழாவின் முன்தினமாக அழைக்கப்படுகின்றது. குடும்பத்தினர் அனைவரும கூடி மகிழ்ந்திருக்கும் இரவாகவும் இது அழைக்கப்படுகின்றது. புத்தாண்டு துவங்கும் அந்த முந்தினத்தில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் ஒன்றாக கூடி விருந்து உட்கொண்டு உடன்பிறந்த சகோதரபாச உணர்வை அனுபவிக்க வேண்டும்.
1 2 3 4 5 6 7 8 9 10
|