 நாடுகளை அடையாளப்படுத்தும் விதமாக சில விலங்குகள் அமைந்துவிடுவதுண்டு. இந்தியாவின் தேசிய விலங்காக புலி இருப்பது போல சீனாவின் தேசிய விலங்கு இராட்சத பாண்டாவாகும். கடல் மட்டத்திலிருந்து 5,000 முதல் 10,000 அடி உயரமான இடத்தில், மூங்கில் அடர்ந்து வளர்ந்துள்ள அகன்ற இலை மற்றும் ஊசியிலைக் காடுகளில் தான் இராட்சத பாண்டா வாழ்கின்றது. கடும் மழையும், அடர் பனியும் தான் அவை வாழும் இடச்சூழலாக இருக்கிறன. ஏறக்குறைய 1,590 பாண்டாக்கள் சீனக்காடுகளில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகமாக Sichuan னிலும் வடமேற்கு மாநிலங்களான Shaanxi மற்றும் Gansu விலும் இவை வாழ்கின்றன. 1 2 3 4 5
|