• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-12 18:20:30    
மரபணுத்தொகுதி ஆய்வு

cri

உலக பாதுகாப்பு ஒன்றியம் இராட்சத பாண்டாவை அழிவுறும் நிலையில் உள்ள விலங்குகளின் சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. எனவே அவற்றை பாதுகாத்து இனபெருக்கமடைய செய்யும்பொருட்டு பாண்டா வளர்ப்பு மற்றும் ஆய்வு தளங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு அழிவுறும் ஆபத்திலுள்ள இராட்சத பாண்டாவை பாதுகாக்க எடுக்கப்டும் பல்வேறு முயற்சிகளில் ஒன்று தான் அதன் மரபணுக்களை ஆராயும் முயற்சி. சர்வதேச இராட்சத பாண்டா மரபணு ஆய்வு திட்டம் இவ்வாண்டு மார்ச் திங்களில் சீனா, பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கனடா அறிவியலாளர்களால் தொடங்கப்பட்டது. தற்போது இராட்சத பாண்டாவின் மரபணுத் தொகுதி ஆய்வினை நிறைவு செய்துள்ளதாக சீன அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் சீன நிபுணர்களான Pan Wenshi, Hou Rong, மற்றும் Tian Geng ஆகியோர் ஈடுபட்டனர். இதிலிருந்து பெறப்பட்டுள்ள ஆய்வு தரவுகள் மூங்கில் உண்பது, கண்ணிமையை சுற்றி காணப்படும் வட்ட வடிவ கறுப்பு வண்ணம் மற்றும் மிக குறைவாக குட்டிகளை இடுவது போன்ற இராட்சத பாண்டாவின் உயிரியல் புரிதல்களை அதிகப்படுத்தும் என்று அறிவியலாளர்கள் எண்ணுகின்றனர்.

1 2 3 4 5