• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-12 18:20:30    
மரபணுத்தொகுதி ஆய்வு

cri

பாண்டா, வடிவத்தில் கரடி போன்று இருக்கும். அதன் காதுகள், கண்ணிமைகள், கால்கள், தோள்பட்டை உரோமங்கள் கறுப்பாக இருக்கின்றன. பிற இடங்களில் வெள்ளை வண்ணமாக இருக்கிறது. அதன் கடினமான தோல், காடுகளில் வாழுகின்ற அவற்றிற்கு பாதுகாப்பு வழங்குவதாக உள்ளது. அவற்றின் உணவு பெரும்பாலும் மூங்கிலாக இருப்பதால், மூங்கிலை உடைத்து சாப்பிடும் வகையில் வலுவான பற்களையும், தாடையையும் கொண்டுள்ளன. இராட்சத பாண்டாக்கள் நான்கு முதல் ஆறு அடி நீளமுடையவை. ஆண் பாண்டா பெண்ணை விட பெரிதாக இருப்பதோடு, ஏறக்குறைய 93 கிலோ வரையும், பெண் பாண்டா சுமார் 81 கிலோ வரையும் எடை கொண்டிருக்கின்றது. காடுகளில் பாண்டா எத்தனை ஆண்டுகள் வாழ்கின்றன என்று அறிவியலாளர்களால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் உயிரியல் பூங்காக்களில் வாழ்கின்ற பாண்டா 35 ஆண்டுகள் வரை வாழ்வதாக கணக்கிட்டுள்ளனர். காடுகளில் 99 விழுக்காடு மூங்கிலையே உணவாக உட்கொள்கின்ற பாண்டா, உயிரியல் பூங்காக்களில் மூங்கில், கரும்பு, அரிசி கஞ்சி, நார் சத்து அதிகம் கொண்ட பிஸ்கட், கெரட் என்ற குருக்கிழங்கு, ஆப்பிள், வத்தாளைக் கிழங்கு ஆகியவற்றை உண்கின்றன.

1 2 3 4 5