
மரபணுத்தொகுதியை பிரித்தெடுத்து ஆய்வு செய்ய மாதிரி பாண்டா ஒன்று வேண்டுமல்லவா! அதற்கு தென்மேற்கு சீனாவின் Sichuan மாநிலத்தில் Chengdu இராட்சத பாண்டா வளர்ப்பு மற்றும் ஆய்வகத்திலுள்ள Jing Jing என்ற 3 வயது பெண் பாண்டா தான் அறிவியலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஐந்து Fuwa சின்னங்களில் ஒன்றுதான் இந்த Jing Jing பாண்டா. உலகளவிலான மரபணுத் தொகுதி ஆய்வில் சீன ஆய்வாளர்கள் சிறந்த பங்களிப்பை செய்து வருகின்றனர். இதற்கு முன்பு அரிசி, பட்டுப்புழு, கோழி மற்றும் பன்றி ஆகியவற்றின் மரபணுத்தொகுதி ஆய்வுக்கு பெரிய பங்களிப்புகள் சீன அறிவியலாளர்களால் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சீன ஹான் இன மக்களின் மரபணுத்தொகுதி ஆய்வை இவர்கள் முதல் முறையாக செய்து முடித்துள்ளனர். தங்களுடைய சுய முயற்சிகளாலும், சர்வதேச திட்டப்பணிகளில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்வதாலும் மரபணுத்தொகுதி ஆய்வில் சீன ஆய்வாளர்கள் பல முன்னேறற்றங்களை கண்டுவருகிறனர். 1 2 3 4 5
|