
இராட்சத பாண்டாவின் மரபணுக்களை தொகுப்பது பற்றி குறிப்பிடும்போது, தனித்தன்மையான இந்த உயிரினத்தை பற்றி ஆழமாக அறியும் மரபணு மற்றும் உயிரியல் ரீதியிலான அடிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங் மரபணுவியல் நிறுவனத்தின் Shenzhen கிளையின் அறிவியலாளரும், இந்த ஆய்வில் ஈடுபட்டவருமான மருத்துவர் Wang Jun குறிப்பிட்டுள்ளார். பாண்டாவின் மரபணுத் தொகுதிகளை வரைவது மற்றும் ஒன்றுசேர்ப்பது மூலம் அது நாய்கள் மற்றும் மனித இன குணநலன்களை கொண்டிருப்பதாகவும், எலிகளிலிருந்து வேறுப்பட்டது என்றும் அறியவந்துள்ளனர். அவை கறுப்பு கரடி வகைகளில் ஒன்றாக இருக்கலாம் என்பதற்கு துணைபுரிகின்ற ஆதாரங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
உலகில் அழியும் விலங்குகளின் பட்டியலில் உள்ள இராட்சத பாண்டா, இனபெருக்கத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. அறிவியலாளர்கள் இதன் மரபணுத் தொகுதிகளை பிரித்தெடுத்து ஆய்வுசெய்ய முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். பாண்டா இனபெருக்கத்தில் அக்கறை காட்டாமல் இருப்பதை இந்த மரபணுத் தொகுதி ஆய்வு, மரபணு ரீதியாக விளக்கமளிக்கும். இவைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் காண்பதும் இந்த ஆய்வின் மற்றொரு நோக்கமாகும். ஆனால் பெய்ஜிங் மரபணுவியல் நிறுவனத்தின் Shenzhen அறிவியலாளர்களோ, இந்த திட்டத்திலிருந்து பெறப்பட்டுள்ள தரவுகள் உயிரினச் சுற்றுச்சூழல், பரிணாம வளர்ச்சி மற்றும் மரபணுத்தொகுதி ஆய்வுநுட்பம் ஆகிய அறிவியல் சார்ந்த துறையில் மிக பரந்த தாக்கங்களை அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
1 2 3 4 5
|