• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-13 12:09:01    
2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri

சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியின் நிறைவு விழாவில், புகழ்பெற்ற ஆஸ்திரேலிய பாடகர் பாடிய கனவு காண துணிவோம் எனும் பாடல் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இந்தப் பாடல் இடம்பெறும் ஒலி நாடாவும் குறுவிட்டும் முழு உலகிலும் வரவேற்பு பெற்றுள்ளன. நிறைவு விழாவுக்கும் துவக்க விழாவுக்கும் இடையில் வேறுபாடுகள் நிலவுகின்றன என்று Darren Yep கூறினார். துவக்க விழா, கோலாகலமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். ஒப்பீட்டளவில், நிறைவு விழா சுவையான மகிழ்ச்சியூட்டும் சூழ்நிலையில் நடத்த வேண்டும் என்று அவர் கருதினார். சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவை ஒரு திறந்த விருந்தாக நடைபெற வேண்டும் என்று வடிவமைப்பாளர்கள் திட்டமித்திருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது

உங்களது வீட்டின் முற்றத்தில் நடைபெறும் BBQ விருந்தைப் போல், இந்த நிறைவு விழா ஆஸ்திரேலிய தனிச்சிறப்புடையது. இது ஒரு கொண்டாட்ட குதூகர கூட்டமாகவும், ஒரு rock & roll இசை கற்சேரியாகவும் திகழ்கின்றது. பல விளையாட்டு வீரர்களையும் புகழ்பெற்ற rock & roll பாடகர் பாடகிகளையும் அழைத்திருந்தோம். நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பார்வையாளர்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய பாடகர்களின் பாடலில் ஆடி பாடி மகிழந்தனர் என்றார் அவர்.

1 2 3 4 5