ஆகையால், நிறங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, பாரம்பரிய சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டதுடன், இளஞ்சிவப்பு, அடர் ஊதா உள்ளிட்ட கால உணர்வுடைய நிறங்களையும் பயன்படுத்துவார் என்று அவர் தெரிவித்தார். தவிர, தலைப்பு பாடல் சீன மற்றும் ஆங்கில மொழியில் பாட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். கீழை நாட்டுத் தன்மையையும் மேலை நாட்டுத் தன்மையையும் ஒன்றிணைப்பதை காட்டும் வகையில், சில மேலை பாடகர்களை அழைக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா வெற்றிகரமாக நடைபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஏனென்றால், விதிகளின் படி, இந்த விழாக்களில் குறிப்பாக துவக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள் உபசரிப்பு நாட்டின் வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும். சீனா ஆயிரம் ஆண்டு வரலாறுடைய பழமையான நாடாகும். இத்துறையில், பல கதைகளை துவக்க விழாவில் வெளிப்படுத்தலாம் என்று Darren Yep கூறினார். அவர் கூறியதாவது
சீனாவின் ஆயிரமாண்டு வரலாறு பற்றிய கதை சுவையானது. இது கால சுரங்கப் பாதை போல, சீனாவின் பண்பாட்டை வெளிப்படுத்தலாம். துவக்க விழா ஒரு மாபெரும் விழாவாக இருக்க வேண்டும். நிறைவு விழா சிட்னி விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவைப் போல் ஒரு இசை விழாவாக இருக்கலாம். பல நவீன பாடகர்கள் மற்றும் அம்சங்கள் இதில் சேரும் என்று நினைக்கின்றேன். நிறைவு விழாவில், ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியின் வெற்றியைக் கொண்ட வேண்டும். பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் அவர். 1 2 3 4 5
|