• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-13 12:09:01    
2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri

துவக்க மற்றும் நிறைவு விழாவின் தனிச்சிறப்பு பற்றி குறிப்பிடுகையில், விழாவில் உபசரிப்பு நாட்டு நாகரிகத்தின் தலைச்சிறந்வற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று yep தெரிவித்தார். அப்போது, அவர்கள் நீண்ட காலம் இந்தப் பிரச்சினை பற்றி யோசித்தனர். ஏனென்றால், ஆஸ்திரேலியாவில் பல தேசிய இன நாகரிகங்கள் உள்ளன. அந்த நாட்டில் ஒரே இன நாகரிகம் என்ற நிலைமை இல்லை. அவர் கூறியதாவது

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலானோர் வெள்ளையர்களாவர். ஆனால் ஆஸ்திரேலிய நாகரிகம், வெள்ளையரின் நாகரிகம் அல்ல. இந்நாட்டில், ஆதி குடிமக்கள், சீனர், மத்திய கிழக்கியர் முதலியோர் வசிக்கின்றனர். ஆகையால், துவக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், வேறுபட்ட நிறம் கொண்ட வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த தன்னார்வத தொண்டர்கள் காணப்பட்டனர் என்றார் அவர்.

Darren Yepஇன் பார்வையில், நீண்ட கால வரலாறு, பண்டைய பாரம்பரியம், குடும்பக் கருத்துக்கான கவனம் முதலியவை சீன நாகரிகத்தின் சிறந்த பகுதிகளாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழாவில், புதுமையையும் பாரம்பரியத்தையும், கீழை நாட்டுத் தன்மையையும் மேலைநாட்டுத் தன்மையையும் சிறப்பாக ஒன்றிணைப்பதை வெளிக்கொணர வேண்டும் என்று அவர் கூறினார். 21வது நூற்றாண்டில் நடைபெறும் இந்த மாபெரும் விளையாட்டு விழாவில், புதிய காலத்தின் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். Darren Yep மேலும் கூறியதாவது

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழாவை பின்னிருந்து அரங்கேற்றினால், நவீன அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். குழந்தைகள் மூலம் எதிர்கால கருத்தை வெளிப்படுத்துவேன். இசை, பின்னணி படம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது, காலத்தைப் பிரதிநிதிப்படுத்துவதைக் கருத்தில் கொள்வேன் என்றார் அவர்.

1 2 3 4 5