 டிசம்பர் திங்களில், வட கிழக்கு சீனாவில் உள்ள Song Nen சமவெளியில் பனி நிறைந்து காணப்படுகிறது. கடந்த 6 திங்களாக சுறுசுறுப்பாக வேலை செய்யும் விவசாயிகள் சற்றே இளைப்பாறி ஓய்வு பெற முடிகிறது. ஆனால், Ji Lin மாநிலத்தின் Bai Qi நகரத்தின் Gou Bei கிராமத்தில், ஆண்டு முழுவதிலும் மிகவும் சுறுசுறுப்பான காலம் இதுவாகும். கிராமத்தில் வாழும் இளைஞர்கள் இக்காலத்தில் பொதுவாக திருமணம் செய்வதுண்டு. ஆடைக் கடைகளும், இக்காலத்தில் திறந்து வைக்கப்படுவதுண்டு. கோலாகலமான நடவடிக்கைகளில், Sun Cheng Min என்பவர் அடிக்கடி காணப்படுகின்றார்.
40 வயதான அவர், Bai Qi நகரத்தின் Xin Nong Cun கலைக் குழுவின் தலைவராவார். அவர், Gou Bei கிராமத்தில் வாழும் ஒரு சாதாரண விவசாயி ஆவார். தமக்கு 14 வயதாக இருந்தது முதல், கிராமத்தில் மூத்த கலைஞர்களிடமிருந்து so-na (trumpet) இசைக்கருவியை வாசிக்க கற்றுக் கொண்டார்.
1 2 3 4 5
|