
அதன் பின்னர், கிராமத்தின் கலை நடவடிக்கை படிப்படியாக வளர்ந்தது. Sun Cheng Min இசைக்குழு ஒன்றை உருவாக்கினார். திருமண விழாக்களில், இக்குழு உறுப்பினர்கள் பாடல்களையும், வட கிழக்கு பிரதேசத்தின் இசை நாடகங்களையும் அரங்கேற்றினர்.
1995ஆம் ஆண்டு இசைக் குழுவில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது Bai Qi நகரத்தின் Xin Nong Cun கலைக் குழுவாக இது வளர்ந்துள்ளது. கலைக் குழுவுக்கு நடமாடும் அரங்கு கிடைத்துள்ளது. வசந்தக்காலம் மற்றும் இலையுதிர்காலத்தில் விவசாயிகள் வயலில் சுறுசுறுப்பாக உழைக்கும் நேரத்தைத் தவிர, இந்த கலைக் குழு திங்கள்தோறும் சுமார் 10 முறை அரங்கேற்றம் நடத்துகின்றது என்று Sun Cheng Min கூறினார்.
1 2 3 4 5
|