• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-14 12:55:43    
Sun Cheng Min மற்றும் Gou Bei கிராமவாசிகளின் இன்பமான வாழ்க்கை

cri

குளிராக இருந்த போதிலும், இக்கலை குழுவின் காரணமாக, Er Ren Zhuan நேசிக்கும் Bai Qi நகரத்தின் கிராமவாசிகளின் ஓய்வு நேர வாழ்க்கை, செழிப்பாகியுள்ளது. கடை வாயிலுக்கு வெளியேயும், கிராமக் கமிட்டி அமைந்துள்ள இடத்திலும், கிராமவாசிகள் ஒன்று கூடும் போது, Er Ren Zhuan என்ற கலை முறையில் பாடி, ஆடுகின்றனர். 60, 70 வயதான முதியோர் இதில் அடிக்கடி கலந்து கொள்வதுண்டு. 63 வயதான கிராமவாசி Wu Yan Sheng மகிழ்ச்சியுடன் கூறியதாவது:

"கலை நடவடிக்கை நல்லது. இதில் கலந்து கொள்ள விரும்புகின்றேன். கலை நடவடிக்கையினால் கிராமத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. தற்போது, கிராமத்தின் தோற்றம், முன்பை விட சிறந்ததாக இருக்கின்றது" என்றார், அவர்.

Sun Cheng Minஇன் தலைமையில், கலைக்குழு உறுப்பினர்கள் கிராமங்களுக்கு சென்று அரங்கேற்றுகின்றனர். அவர்கள் அணிந்த சிவப்பு, பச்சை நிறமான ஆடைகள், வெண்ணிற பூமிக்கு வண்ணம் தருகின்றது. கிராமவாசிகளின் சிரிப்பொலி, Er Ren Zhuan நடிகர்கள் பாடும் பாட்டொலியுடன், குளிர்காலத்தின் Song Nen சமவெளியில் நிகழ்ந்த கதைகளை உயிர்த்துடிப்புடன் தெரிவிக்கின்றது.


1 2 3 4 5