• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-14 12:55:43    
Sun Cheng Min மற்றும் Gou Bei கிராமவாசிகளின் இன்பமான வாழ்க்கை

cri

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல், குறிப்பாக அண்மை ஈராண்டுகால வளர்ச்சி மூலம், Sun Cheng Min தலைமையிலான Bai Qi நகர Xin Nong Cun கலைக்குழு, Er Ren Zhuanஐத் தவிர, வேறு பல நிகழ்ச்சிகளையும் அரங்கேற்ற முடியும். குறிப்பாக திருமண விழாவின் போது, குறைந்தது இரண்டு நாட்கள் குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதுண்டு.

தற்போது, Sun Cheng Min தலைமையிலான இந்த கலைக்குழு, Gou Bei கிராமத்திலும், அதற்கு அருகில் உள்ள கிராமங்களிலும் புகழ் பெற்றுள்ளது. குழுவின் அரங்கு கார் எங்கே சென்றாலும், கிராமவாசிகள் ஒன்று கூடி, பார்க்கின்றனர். அவர்கள், குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆடி பாடுகின்றனர். இக்குழுவின் புகழ் பரவி வருவதுடன், Er Ren Zhuan நடிகர்கள் சிலர் Sun Cheng Minவுடன் ஒத்துழைக்கத் துவங்கினர்.

Er Ren Zhuan நடிகர்களும், பாடகர்களும் ஆக சுமார் 30 பேர் அவருடன் ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளனர். Sun Cheng Ming பேசுகையில், முன்பு Er Ren Zhuan நடிகர்கள் குறைவு என்றும், தற்போது, இக்கலை செழிப்பாகி வருவதுடன், Er Ren Zhuan நடிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

கலைக்குழுவின் அரங்கேற்றத்துக்கு வழங்கப்படும் பணம், துவக்கத்தில் இருந்த 3 நூறு யுவானிலிருந்து பத்து ஆயிரம் யுவானாக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், அரங்கேற்றுமாறு கலைக்குழுவுக்கு வேண்டுகோள் விடுக்கும் மக்கள் மேலும் அதிகரித்து வருகின்றனர். Sun Cheng Min கூறியதாவது:

"தற்போது கிராமவாசிகளின் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளது. திருமண விழாவைத் தவிர, ஆடைக் கடை, பேரங்காடி, உணவகம் ஆகியவற்றின் திறப்பு விழாவில், Er Ren Zhuan நிகழ்ச்சி, மக்களின் கவனத்தை ஈர்ப்பதால், கடைகளைப் பிரச்சாரம் செய்யும் விளம்பரமாக மாறியுள்ளது" என்றார், அவர்.

1 2 3 4 5