
Er Ren Zhuan என்பது, உள்ளூர் தனிச்சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். சீனாவின் வட கிழக்கு பிரதேசத்தில், இது மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. Gou Bei கிராமவாசிகள், Er Ren Zhuanஆல் ஆழமாக ஈர்க்கப்படுகின்றனர். Ji Lin மாநிலத்தின் நாட்டுப்புற வழக்கச் சங்கத் தலைவர் Cao Bao Ming பேசுகையில், Ji Lin பிரதேசத்தில் அதிகமாக விளையும் சோயா அவரை மற்றும் சீன சோளத்தைப் போல், Er Ren Zhuan, மிகப் பல மக்கள், குறிப்பாக பரந்துபட்ட விவசாயிகளின் நேசிப்பைப் பெற்றுள்ளது.
ஆண், பெண் ஆகிய இரு நடிகர்கள், சிவப்பு மற்றும் பச்சை நிறமான ஆடைகளை அணிந்து, பேசி, பாடி, ஆடுகின்றனர். அவர்கள் கைகளில் வீசி விளையாடும் வண்ண கைக்குட்டை மற்றும் விசிறிகள், பறந்து திரிகின்ற வண்ணத்துப்பூச்சிகள் போல் இருக்கின்றன. இருவர் பாடும் பாடல்கள், மலர்கள் போன்ற அருமையான காதலைப் பாராட்டுகின்றன. அவர்களின் ஆடல்கள், வாழ்க்கை மீதான மக்களின் அன்பையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகின்றன.
1 2 3 4 5
|