சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளில், சீனா மிக நீண்டகால மற்றும் விரைவான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. பொருளாதாரம் வளர்ச்சியடைவதுடன், முன்கண்டிராத அளவில், சீனா உலகத்துடன் பரிமாற்றும் மேகொண்டு, பல துறைகளில் ஒத்துழைத்து வருகிறது. தற்போது, பரஸ்பரம் நலன் தரும் கண்ணோட்டத்தில், உலகப் பொருளாதார இயக்கத்தில் வளர்ச்சி போக்கில் சீனா கலந்துகொள்கின்றது. உலகின் வேறுபட்ட நாகரிகங்களுடன் உரையாடல் மற்றும் பரிமாற்றத்தை சீனா மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், சர்வதேச விவகாரத்தில் சீனா பொறுப்பான மனப்பான்மையோடு பங்காற்றியுள்ளது. இதன் மூலம், மேலதிகமான ஈர்ப்பு ஆற்றலை சீனா வெளிப்படுத்தியுள்ளது. 1 2 3 4 5
|