• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-19 22:10:04    
சீனாவின் ஈர்ப்பு ஆற்றல்

cri

சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன், 1978ம் ஆண்டு, ஆயிரத்து 236வெளிநாட்டு மாணவர்கள் மட்டும் சீனாவுக்கு வந்து கல்வி கற்றனர். 2007ம் ஆண்டு, சுமார் 180 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்த 2 இலட்சம் மாணவர்கள், சீனாவின் 540 உயர் கல்வி நிலையங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகங்களில் கல்வி பெற்றனர். மனிதத் தொடர்பு மூலம், சீன மற்றும் சர்வதேச சமூக பண்பாட்டுப் பரிமாற்றம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 15ம் நாள், நீண்டகால அமைதி, கூட்டுச் செழுமை வாய்ந்த இணக்க உலகத்தை உருவாக்கப் பாடுவடுவது என்ற தலைப்பில் சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ், ஐ.நா நிறுவப்பட்ட 60வது ஆண்டின் நிறைவுக்கான உச்சிமாநாட்டில், உரையாற்றினார்.

ஒரு நாட்டின் சொந்த சமூக அமைப்புமுறையும் வளர்ச்சிப் பாதையும் இதர பல்வேறு நாடுகளின் தெரிவுக்கும் உரிமைக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். பரஸ்பரம் அனுபவங்களை கற்றுக்கொண்டு, தன் நாட்டின் உண்மையான நிலைமைப்படி வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபடுவதை முன்னேற்ற வேண்டும். வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையில் உரையாடல் மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, போட்டியின் மூலம் பரஸ்பரம் குறை நிரப்பி, பொது அடிப்படையைக் கண்டறிந்து, வேற்றுமைகளில் கூட்டு வளர்ச்சியை நாடி, ஐயம் மற்றும் தப்பெண்ணத்தை நீக்கப் பாடுபட வேண்டும். எனவே, மக்களுக்கிடையிலான மேலும் சுமூகமான வாழ்க்கை, உலகத்தை மேலும் செழிப்பாக்கும். சமத்துவ முறையில் வெளிநாட்டுத் திறப்பை பின்பற்றி, பல்வகை நாகரிகங்களைப் பாதுகாத்து, சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கத்தை முன்னேற்றி, இணக்க உலகத்தை கட்டியமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று ஹூசிந்தாவ் தெரிவித்தார்.

1 2 3 4 5