சீன சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட துவக்கத்தில், சர்வதேச நிலைமையில், அமைதி மற்றும் வளர்ச்சி, உலகின் முக்கிய அம்சங்களாகும். உலகில் புகழ் பெற்ற இந்த கருத்துக்களை, முன்னாள் சீனத் தலைவர் dengxiaoping முன்வைத்தார். சீனா உலகத்துடான உறவை, இந்த முன்னேறிய கருத்துக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முறையில் மாற்றியுள்ளது.
தற்போது, ஐ.நா அமைதி காப்பு நடவடிக்கை, பிற நாடுகளுடன் சேர்ந்து பரஸ்பரம் நலன் தந்து கூட்டு வெற்றி பெறுகின்ற ஒத்துழைப்பில் ஊன்றி நிற்பது, உலக வர்த்தக அமைப்பில் சேர்வது, சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தை உருவாக்க முனைவது, சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது, கடல் கொந்தளிப்பு மற்றும் சூராவளியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மனித நேய உதவியை வழங்குவது முதலியவற்றில் சீனா ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டு வருகிறது. மனித குலம் பொதுவாக எதிர்நோக்குகின்ற நெருக்கடி மற்றும் அறைகூவலைச் சமாளிக்கும் போது, பிற நாடுகளின் தேர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வளர்ச்சியை சீனா நாடி வருகிறது. 1 2 3 4 5
|