கடந்த இரண்டு ஆண்டுகளில், அமெரிக்க வீடு மற்றும் நிலச் சொத்துக்கான கடன் பிரச்சினையால் ஏற்பட்ட, நிதி நெருக்கடி உலகளவில் பரவலாகியுள்ளது. இதனால், பன்னாட்டு நாணய நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன. நாணய நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க பல அரசுகள் நிர்ப்பந்திக்கப்பட்டன. 2008ம் ஆண்டில், உலக வங்கித் துறை நெருக்கடியை எதிர்நோக்கிய போதிலும், சீன வங்கித் துறை நிதானமாக வளர்ந்துள்ளது. புதிய ஆண்டிலான வளர்ச்சித் திட்டத்தை சீன வங்கித் துறை வகுக்கத் துவங்கியுள்ளது.
உலக நாணயத் துறை மேலும் ஒன்றிணைந்து வரும் போக்கில், பல்வேறு நாடுகளின் பெரிய நாணய நிறுவனங்கள், உலக நிதி நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. Merrill Lynch உள்ளிட்ட அமெரிக்க வங்கிகள் இதில் அடங்குகின்றன. ஆசியாவில், நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், ஜப்பானிய நாணய அமைப்புமுறைக்கு ஜப்பான் அரசு, ஒரு இலட்சம் கோடி யென் வழங்கியது.
1 2 3 4 5
|