அமெரிக்க வீடு மற்றும் நிலச் சொத்துக்கான கடன் பிரச்சினையால், சில சீன வங்கிகள் பாதிக்கப்பட்டன. இருந்த போதிலும், இந்த பாதிப்புகள் எல்லைக்குட்பட்ட அளவில் ஏற்படுகின்றன என்று சீன மக்கள் வங்கியின் தலைவர் zhouxiaochuan கருத்துக்கள் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதவாது:
உலக நிதி நெருக்கடியால், சீன நாணய நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், சீன நாணய நிறுவனங்களின் அளவு பெரியது. அதேவேளையில், அவை சீராக இயங்குகின்றன. எனவே, இந்த நிதி நெருக்கடி கொண்டு வருகின்ற பாதிப்புகளை, இந்த நிறுவனங்கள கையாள முடியும் என்று அவர் கூறினார்.
உலக நிதி நெருக்கடியால், சீன வங்கித் துறை பெரிதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், நிகழக் கூடிய அபாயத்தை தடுக்க, சீன வங்கித் துறை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிதி அபாயத்தை தடுக்கும் பணியை வலுப்படுத்த வேண்டும். சீன வங்கித் துறைக்கான கண்காணிப்பு நிர்வாக ஆணையம் இவ்வாறு கோரிக்கை விடுத்தது. எதிர்காலத்தில், வெளிநாட்டு முதலீடுகளின் மதிப்பு குறைவால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதோடு, உள்நாட்டில் வாராக் கடன் மீண்டும் உயரும் அபாயத்தை தடுக்க வேண்டும். 2008ம் ஆண்டு, நவம்பர் திங்களில் நடைபெற்ற ஒரு தொடர்புடைய கூட்டத்தில், வங்கி கண்காணிப்பு நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவர் jiangdingzhi இவ்வாறு தெரிவித்தார்.
1 2 3 4 5
|