பிற நாடுகளின் நாணய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், சீனாவின் பல்வேறு வங்கிகள் சீராக செயல்பட்டு வருகின்றன. 2008ம் ஆண்டின் முதல் 9 திங்களில், பங்கு பத்திரச் சந்தையில் நுழைந்த 14 வங்கிகளின் லாபம், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 50 விழுக்காடு அதிகமாகும். சீனாவில் வங்கிகள் உள்ளிட்ட நாணய நிறுவனங்கள் சீராக வளர்ந்து வருகின்றன. 2008ம் ஆண்டு சீன நாணய கருத்தரங்கில், சீன வங்கித் துறையின் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையத்தின் தலைவர் limingkang இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி, அவர் கூறியதாவது:

2008ம் ஆண்டின் நவம்பர் திங்கள் இறுதி வரை, சீன வங்கித் துறை மற்றும் நாணய நிறுவனங்களின் மொத்த கையிருப்புத்தொகை 61 இலட்சத்து 10 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இந்த நிறுவனங்களின் இடர்ப்பாட்டு எதிர்ப்பு ஆற்றல் பெரிதும் உயர்ந்துள்ளது. வங்கித் துறையின் சேவை ஆற்றல் மற்றும் நிலை தொடர்ந்து அதிகரித்து, செயல்திறன் இடைவிடாமல் மேம்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
1 2 3 4 5
|