• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-09 16:29:50    
சீனாவின் வங்கித் துறை

cri

பல்வேறு நாடுகளின் வங்கிகள், நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்நோக்கிய போது, அபாயத்தைக் குறைத்து சமாளிக்கும் ஆற்றலை சீனாவின் பல்வேறு வணிக வங்கிகள் மேம்படுத்தியுள்ளன. 10 இலட்சம் கோடி யுவான் கையிருப்பு கொண்ட சீன தொழில் மற்றும் வணிக வங்கி, சீனாவில் மிகப் பெரிய வணிக வங்கியாக விளங்குகிறது. தற்போது, உலக நிதி நெருக்கடி பரவலாகி, உலக மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அபாயத்தைக் கட்டுப்படுத்தி, கையிருப்பின் நிலைமையை இந்த வங்கி வலுப்படுத்தும். அதேவேளையில், உள்ளார்ந்த வளர்ச்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த வங்கியின் வளர்ச்சியை தொடர்ந்து முன்னேற்று என்று இந்த வங்கியின் தலைமை இயக்குநர் ஜங் ஜியெ சின் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:

சொந்த போட்டியாற்றலை அதிகரித்து, சந்தையிலுள்ள மேம்பாடுகளை விரிவாக்க நாங்கள் பாடுபடுவோம். நிர்வாக அமைப்புமுறையை மாற்றுவதன் மூலம், தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். நிதி நெருக்கடியிலிருந்து உரிய படிப்பினையை கற்று, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அபாயத்துக்கு எதிரான நிதி நிர்வாகத்தை பன்முகங்களிலும் வலுப்படுத்த வேண்டும். பொருளாதாரத்தின் மந்தமாக்கப் போக்கில், நம்பிக்கை கடன் கையிருப்பின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்து, உலக நிதி நெருக்கடி கொண்டு வருகின்ற அபாயத்தை பயன்தரும் முறையில் தடுக்க வேண்டும். அதேவேளையில், இன்னல்களைச் சமாளித்து, பொருளாதாரம் நிதானமாக செயல்படுவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டும். உலகின் முன்னணி நவீன நாணய நிறுவனமாக மாறும் பாதையில் நடைபோட நாம் முயற்சி செய்வோம் என்று அவர் கூறினார்.

1 2 3 4 5