உலகப் பொருளாதார நிலைமையின் மாற்றம் தவிர்க்க முடியாமல் தங்கள் தொழில் நிறுவனத்தின் வணிகத்தைப் பாதித்தது என்று குவாங் துங் மாநிலப் பட்டுத்துணி நெசவுக் குழுமத்தின் துணை மேலாளர் wang yongli கூறினார்.
தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முன்பதிவுப் படிவங்கள் தெளிவாக குறைந்துள்ளன. அமெரிக்க வர்த்தக முன்பதிவுப் படிவங்கள் 30இலிருந்து 50 விழுகாடு வரை குறைந்துள்ளன. நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட சந்தையின் தேவை குறைவு, இதன் முக்கிய காரணமாகும் என்றார் அவர்.
புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டின் முதல் 3 காலாண்டில், சீனாவின் ஏற்றுமதி அதிகரிப்பு, 2007ம் ஆண்டில் அதே காலத்தை விட, 4.8 விழுக்காடு குறைந்தது. குறிப்பாக, ஆடை மற்றும் விளையாட்டுப் பொம்மைகள் தொழிலின் ஏற்றுமதி, 20 விழுக்காடும், 16 விழுக்காடும் குறைந்தன.
1 2 3 4 5
|