தவிரவும், நேரடியாக பாதிக்கப்பட்ட சீன ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள், தங்களாது பொருளாதார நிலையின்படி செயல்பாட்டு முறைகளை மாற்றி புதிய வளர்ச்சிப் பாதையைத் தேடுகின்றன. இது குறித்து, சீன புகழ் பெற்ற GeLi காற்று பதனாக்கி உற்பத்திக் குழுமத்தின் தலைவர் dong mingzhu அம்மையார் கூறியதாவது,
தொழில் நிறுவனங்கள்,தங்களதுசொந்த போட்டி ஆற்றலை வலுப்படுத்த வேண்டும். முன்னேறிய தொழில்நுட்பம், சிறந்த சேவை, நேர்மையான மனபான்மை ஆகியவற்றின் மூலம் இழந்த சந்தையை மீண்டும் பெற முடியும் என்றார் அவர்.
இசைக் கருவி தொழிலில் முன்னணியிலுள்ள சீன குவாங் துங் zhujiang பியானோ குழுமத்தின் ஆண்டு உற்பத்தி எண்ணிக்கை, 80 ஆயிரத்திற்கு மேலாகும். அது, உலகின் மிக பெரிய பியானோ உற்பத்தி குழுமமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இக்குழுமத்தின் பியானோவிற்பனை எண்ணிக்கை தொடர்ந்து நிதானமாக அதிகரித்து வருகிறது. அது, தொழில் நுட்பப் புத்தாக்கம் மூலம் இந்த விற்பனையில் சாதனை பெற்றது என்று இக்குழுமத்தின் தலைவர் huang weilin கூறினார்.
1 2 3 4 5
|