2008ம் ஆண்டில், தொழில் நுட்பப் புத்தாக்கம் மூலம், நாங்கள் மேலதிக உயர் தரமுடைய உற்பத்திப் பொருட்களை தயாரித்தோம். தற்போது, அமெரிக்காவின் 3 முக்கிய பியானோ கடைகளும், எங்கள் குழுமத்தின் வாடிக்கையாளர் தான். அவற்றின் 50 விழுக்காட்டுக்கு மேலான பியானோக்கள், எங்கள் குழுமத்தினால் தயாரிக்கப்பட்டவை என்றார் அவர்.
சீன அரசு ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்கு கொள்கையளவில் ஆதரவு அளிப்பதோடு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறது. புதிதாக வளரும் நாடுகள் மீதான நிதி நெருக்கடியின் பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவு. அதனால், சீன தொழில் நிறுவனங்கள், அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சீன வணிக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக பிரிவின் துணைத் தலைவர் wen zhongliang கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
தற்போதைய உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, வெவ்வேறு நாடுகளை வேறுபட்ட அளவில் பாதித்தது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில், நிதி நெருக்கடியின் பாதிப்பு தெளிவாக உண்ரப்படுகிறது. ஆனால், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தெற்காசியா முதலிய புதிதாக வளரும் சந்தைகளில், அதிக உள்ளார்ந்த ஆற்றலைக் கண்டுபிடிக்க முடிகிறது என்றார் அவர்.
ஆற்றல் மிக்க சீன தொழில் நிறுவனங்கள், நிதி நெருக்கடி கொண்டு வந்த குளிர்காலத்தை வெற்றிகரமாக கழிக்க முடியும் என்று சீன வணிக அமைச்சர் chen deming கூறினார்.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி நடைமுறையான கடந்த 30 ஆண்டுகளில், சீன தொழில் நிறுவனங்கள் தங்கள் முயற்சி மூலம், சந்தைக்கு ஏற்ற ஆற்றலை பெரிதும் உயர்த்திள்ளன. சந்தைக்கேற்றபடி உற்பத்திப் பொருட்களின் கட்டுக்கோப்பை சரிப்படுத்தி, செயல்பாட்டு முறையை மாற்றி, பன்முகங்களிலும் சந்தையை விரிவாக்கும் ஆற்றலை அதிகரித்துள்ளது. தவிரவும், சீனாவும் ஒரு மிக பெரிய சந்தையாகும் என்று தற்போது அவை கண்டறிந்துள்ளன. எனவே வெளிநாட்டு வர்த்தகத்திற்கு உற்பத்தியான வணிகப் பொருட்களை, சீனாவிலே விற்பனை செய்யலாம். சீன தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளித்து மேலும் சீராக வளர்வது திண்ணம் என்று chen deming நம்பிக்கை தெரிவித்தார். 1 2 3 4 5
|