நிதி நெருக்கடி ஏற்படுத்திய அறைகூவல்களைச் சமாளிக்க, பல பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை சீனா வெளியிட்டது. வெளிநாட்டு வர்த்தகம் மீது, சீன அரசு அதிக கவனம் செலுத்துகிறது. வெளிநாட்டு வர்த்தகச் சூழலை மேம்படுத்துவது, மேம்பாடுடைய தொழில்நிறுவனங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஆதரவளிப்பது,
முதலியவை இந்நடவடிக்கைகளில் அடங்குகின்றன. தவிர, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு நிதி அமைப்புகள் மேலதிக கடன் வழங்குவது, நிதி திரட்டல் வழிகளை விரிவாக்குவது முதலியவற்றுக்கு, சீன அரசு ஊக்கமளிக்கிறது.
2008ம் ஆண்டு பல்வகை வணிகப் பொருட்களின் ஏற்றுமதி வரியை சீன அரசு பல முறை குறைத்துள்ளது. சீன சுங்கத் துறையின் தலைமை அலுவலகம், ஏற்றுமதி சந்தை மீதான கண்காணிப்பை வலுப்படுத்தியது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மாற்றங்களையும், வெளிநாட்டு சந்தையில் ஏற்படும் தேவையின் மாற்றங்களையும், அது காலதாமதமின்றி வெளியிட்டு, தொழில்நிறுவனங்களுக்கு தகவல் சேவை வழங்குகிறது.
1 2 3 4 5
|