 சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவின் வட பகுதியில், திபெத்திய மருந்துகளை விளக்கும் Thangka ஓவியங்களின் காட்சியகம், 2007ம் ஆண்டு அக்டோபர் திங்கள் கட்டியமைக்கப்பட்டது. அங்கு, திபெத்திய மருந்து, வானவியல் மற்றும் நாள்காட்டி அல்லது நேர அளவீடுகள் தொடர்புடைய 80 Thangka ஓவியங்கள் காட்சியளிக்கின்றன.
Thangka என்பது திபெத் மொழியில் வண்ண பட்டுத்துணியால் அலங்காரம் செய்யப்படும் மதம் சார்ந்த சுருள் ஓவியமாகும். அவை மெல்லிய துணி அல்லது நாரிழைத் துணியில் வரையப்பட்டவை. ஒவ்வொரு Thangka ஓவியத்தின் நீளம், சுமார் 1 மீட்டராகும். அதன் அகலம் சுமார் 0.8 மீட்டராகும். 1400 ஆண்டுகளுக்கு முன், பேரரசர் Songtsan Gambo ஆட்சி புரிந்த போது, அது புகழ்பெறத் துவங்கியது. Thangka ஓவியங்கள் முக்கியமாக, திபெத் இனத்தின் வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றுடன் தொடர்பாக வரையப்பட்டன.
லாசா Thangkaக் கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த திபெத்திய மருந்துகளை விளக்கும் Thangka ஓவியங்கள், பழங்காலத் திபெத் மருந்தில் தலைசிறந்த நான்கு மருத்துவ சூத்திரங்கள் என்ற நூலின் உள்ளடக்கங்கள் பற்றி வரையப்பட்ட வண்ண வரைப் படங்களாகும். அவற்றின் எண்ணிக்கை 80 ஆகும். அவற்றில், 5 ஆயிரம் சிறிய படங்கள் இடம்பெறுகின்றன. திபெத் மருந்துகளை விளக்கும் Thangka, அப்போது மிக தெளிவான வடிவில், மருத்துவ கல்வியைக் கற்கும் கருவியாகும்.
1 2 3 4 5
|