
அவை, நான்கு மருத்துவ சூத்திரங்கள் நூலுடன் நெருக்கமாக தொடர்ந்புடையவை. இந்நூலின் உள்ளடக்கத்தை மாதிரியாக கொண்டு வரையப்பட்டவை. இந்த 80 Thangkaகள், மிகவும் நீண்டகாலமான மருத்துவ கல்விக்கான வரைப்படங்களாகும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இப்போது, அவை கையேற்றப்படுவது என்பது, ஒரு மகத்தான விடயமாகும் என்று திபெத்திய மருந்து அறிஞர் Dradul அறிமுகப்படுத்தினார்.
கி.பி. 8ம் நூற்றாண்டில், நான்கு மருத்துவ சூத்திரங்கள் என்ற நூல் எழுதப்பட்டது. திபெத்திய மருந்தின் மூதாதையர் என்றழைக்கப்படும் Yuthok Yonten Gonpo, அதன் ஆசிரியர் ஆவார். திபெத்தின் உள்ளூர் மருத்துவச் சிகிச்சையிலான அனுபவங்களை அவர் தொகுத்த அடிப்படையில், சீன பாரம்பரிய, பழங்கால அரபு மற்றும் இந்திய மருத்துவங்களின் தலைசிறந்த சாதனைகளை பயன்படுத்தி, இந்த மருத்துவ நூலை இயற்றினார்.
1 2 3 4 5
|