
இந்த 79 Thangkaகளும், 1923ம் ஆண்டு திபெத்தில் புகழ்பெற்ற திபெத்திய மருந்து மூதாதையர் Qenrao Norbu வரைந்த புகழ்பெற்ற மருத்துவர் என்ற படமும் சேர்ந்து, திபெத்திய மருந்துகளை விளக்கும் 80 Thangka ஓவியங்கள் உருவாகின.
பல ஆண்டுகள் கடந்ததுடன், இந்த Thangkaகளின் சில பகுதிகள் சீர்குலைக்கப்பட்டன. ஆனால், அவற்றை சீராக்கும் வகையில், 13வது தலாய் லாமா சில புகழ்பெற்ற திபெத்திய மருந்து நிபுணர்களை அனுப்பியதன் மூலம், 80 Thangkaகள், முழுமையாக காக்கப்பட்டுள்ளன. தற்போது, அவை, திபெத் அருங்காட்சியகத்திலும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் திபெத் மருத்துவமனையிலும் வைக்கப்பட்டு, மக்கள் கற்றுக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. அவை, திபெத்திய மருந்தின் பயன்பாட்டை ஆராய்ந்து அறிய கிடைத்துள்ள அரிய தகவல்களாகும்.
12ம் நூற்றாண்டில், ஓவியங்களின் மூலம் திபெத்திய மருத்துவக் கல்வியை அறிமுகப்படுத்தியது, சீனாவின் மருத்துவ வரலாற்றில் உள்ள ஒரே ஒரு முறையாகும். உலக மருத்துவ வரலாற்றிலும், அது அரிய விடயமாகும் என்று இந்திய மருத்துவவியல் நிபுணர் Das, இந்த Thangkaகளைக் கண்ட பின் பாராட்டினார். 1 2 3 4 5
|