• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-24 16:16:44    
வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் உள்நாட்டுச் சந்தை

cri

தரவுகளின் படி, இவ்வாண்டின் முதல் 5 திங்களில் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத் தொகை, 76 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளது. இதற்கு மாறாக, சீனாவின் உள்நாட்டு சமூக நுகர்வு சில்லறை பொருட்களின் விற்பனைத் தொகை, 15 விழுக்காடு அதிகரித்தது.

நிதி நெருக்கடி நிகழ்ந்த பின், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி வர்த்தகத்தில் குறிப்பிட்ட நிர்பந்தத்தை எதிர்கொண்டன. குறிப்பாக, சொந்த வணிகச் சின்னமில்லாமல் பிற நிறுவனங்களுக்காக பதனீடு செய்கின்ற தொழில்நிறுவனங்கள், குறைந்து வருகின்ற முன்பதிவுப் படிவங்கள், அதிக கையிருப்புப் பொருட்கள் முதலிய பிரச்சினைகளை எதிர்நோக்கின. அவை புதிய வளர்ச்சிப் பாதையை தேட நேரிட்டன. சோதனையின் மனப்பான்மையுடன், பல தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் ஒத்துழைப்புக் கூட்டாளிகளைத் தேடத் துவங்கின.

சீனாவின் சுமார் 500 வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்களின் 2000 வகை வெளிநாட்டு வர்த்தகப் பொருட்கள் நான்சிங் நகரில் நடைபெற்ற இப்பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. தவிரவும், அதிக உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டன. 400க்கு மேலான சீன பேரங்காடிகள் இங்கு வந்து வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்களுடன் வணிகம் செய்தன.

1 2 3 4 5