ஆனால், வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் உள்நாட்டு வர்த்தகத்திற்குமிடை செயல்பாட்டு முறை, வர்த்தக விதிகள், கணக்கு முறை முதலியவற்றில் பெரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. எனவே வெளிநாட்டுக்கான வர்த்தகப்பொருட்களை உள்நாட்டில் விற்பது சுமூகமாக நனவாவது சாத்தியமில்லை. அத்தகைய பொருட்காட்சி, இரு தரப்புகளுக்கிடை பரிமாற்றத்தை முன்னேற்ற முடியும் என்று ஷான்சி மாநிலத்தின் ஒரு வணிக வளாகத்தின் பொறுப்பாளர் zhang zhenhong கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
சில வெளிநாட்டுக்கான வர்த்தகத் தொழில் நிறுவனங்கள், குறைந்த காலத்தில் அனைத்து கையிருப்புப்பொருட்களையும் உள்நாட்டில் விற்க விரும்புகின்றன. ஆனால் இது நனவாக முடியாது. முரண்பாடுகளை நீக்க, காலமும் பரிமாற்றமும் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
நான்சிங் நகரில் நடைபெற்ற இப்பொருட்காட்சி, குறுகிய காலத்தில் நடைபெற்ற பொருட்காட்சி அல்ல. இது மொத்தம் 2 ஆண்டுகாலம் நீடிக்கும். நான்சிங்கை தவிர, சீனாவின் ஹார்பின், ஷென்யாங், தாலியென் முதலிய நகரங்களிலும் இப்பொருட்காட்சி நடைபெறும் என்று சீன வணிக அமைச்சகத்தின் பொருள் புழக்க முன்னேற்ற மையத்தின் துணைத் தலைவர் xumin கூறினார்.
இதன் மூலம், சீன வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்களின் சிக்கல்களை கூடிய விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். 1 2 3 4 5
|