• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-24 16:16:44    
வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் உள்நாட்டுச் சந்தை

cri

வெளிநாடுகளில் விற்கப்பட்ட பொருட்கள், தரம், வடிவம் முதலியவற்றில் அதிக மேம்பாடுகளைக் கொள்கின்றன. இவற்றை உள்நாட்டு பேரங்காடிகளில் விற்றால், பேரங்காடியின் பொருள் கட்டுமானத்தை சரிப்படுத்த முடியும். பேரங்காடிகள், சர்வதேச நிலைக்கு படிப்படியாக உயரும் என்று லியென் ஹூவா பேரங்காடியின் மேலாளர் liujing கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

இப்பொருட்காட்சி மூலம், வெளி வர்த்தக நிறுவனங்கள் எங்கள் மனப்பான்மையை அறிய முடியும். நாங்கள் சிறந்த தரமுடைய வணிகப் பொருட்களை வாங்க விரும்புகிறோம். வினியோக உறவு சமமாக இருக்க வேண்டும். எங்களுக்கு அளவுக்கு மீறிய நிபந்தனையை உருவாக்கக் கூடாது. சமமான உறவில், நாங்கள் ஒன்று மற்றதன் தரப்பை அறிய முடியும் என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்கள் விற்பனை வழிமுறைகளை விரிவாக்க உதவும் வகையில், இவ்வாண்டில் சீன வணிக அமைச்சகம், 3 இத்தகைய பெரிய பொருட்காட்சிகளை நடத்தியது. அவை குறிப்பிடத்தக்க பயன் பெற்றன. குறிப்பாக, நடுத்தர மற்றும் சிறிய ரக வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் இவற்றின் மூலம் நலன் பெற்றுள்ளன. இது பற்றி, சீன வணிக அமைச்சகத்தின் பொருள் புழக்க முன்னேற்ற மையத்தின் துணைத் தலைவர் xumin கூறியதாவது,

நடுத்தர மற்றும் சிறிய ரக வெளி வர்த்தகத் தொழில் நிறுவனங்கள் புதிய வணிக கூட்டாளியை கண்டறிவது மிக முக்கியமானது. நிதி நெருக்கடியினால் அவற்றின் கொள்வனவு முன்பதிவுப் படிவங்கள் குறைந்தன. அவற்றின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இப்பொருட்காட்சி, நெருக்கடியின் போது அவற்றுக்கு புதிய வழிகளை வழங்கியது என்று அவர் கூறினார்.

1 2 3 4 5