சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வெளிநாடுகள், ஹங்காங், மக்கௌ, தைவான் ஆகியவை வழங்கிய நன்கொடை அனைத்தும், நியாயமாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தப்பட்டது என்று சீன தேசிய தணிக்கை ஆணையம் 6ம் நாள் தெரிவித்தது.
2009ம் ஆண்டின் சப்டம்பர் 30ம் நாள் வரை, இப்பிரதேசங்கள் பெற்ற நன்கொடை மற்றும் பொருட்களின் மதிப்பு, 7970 கோடியே 30 இலட்சம் யுவானாகும். அவற்றில், சர்வதேச அமைப்புகள், மற்றும் வெளிநாடு வாழ் சீனர்கள் வழங்கிய உதவித் தொகை, 793 கோடி யுவானைத் தாண்டியது என்று சீன தேசிய தணிக்கை ஆணையம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
விவசாயிகளுக்கு வீடு, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் முதலிய கட்டுமானப் பணிகளில் இத்தொகை முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.