செயற்கை ஏரியில் பீகிங் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்தாலும் மறக்க முடியாத இடம் அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள செயற்கை ஏரி. நம்பமுடியாத அளவில் அந்த ஏரி ஒரு செயற்கையான ஆற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதில் பணி கட்டியாகி இருந்தது.
|
போதிசத்துவரும் லாமாக் கோவிலும் நாங்கள் சென்றது லாமா கோவில். மிகவும் அருமையான, அமைதியான கோவில். அங்கு நம் நாட்டில் கோவில்களில் பக்தி ஏற்றுவது போன்று, இங்கும் புத்த பெருமானுக்கு வரும் பக்தர்கள் பக்தி ஏற்றுகிறார்கள். மிகவும் அருமையான வாசனை அதில் வருகிறது. நம் ஊர் பக்தியைப் போல் அல்லாது, இது மிகப் பெரிதாக உள்ளது. அதில் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
|
தியென்மென் சதுக்கத்திலும் அரண்மனை அருங்காட்சியகத்திலும் மூன்றாம் நாள் பயணம் பீஜிங் நகரத்தில் மேற்கொண்டோம். காலையில் சென்ற இடம் ஒரு வாரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத் தெரு. சீனாவின் பண்டைய காலத்தில் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட அந்தத் தெருவினை இன்றும் அதேப் போன்று பாதுகாத்து வருகின்றனர்.
|
உலகின் மிகவும் புகழ்பெற்ற இடமான சீனப் பெருஞ்சுவருக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி ஏராளம் சொல்ல வேண்டும். வாரலாற்றுத் தகவல்கள் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும். ஆனால் அனுபவப் குறிப்புகள் கிடைப்பது மிகவும் அறிது. எனது அனுபவத்தினில் மனிதாராக பிறந்த ஒவ்வொருவரும் கட்டயாம் தனது வாழ்நாளில் பார்த்தே தீரவேண்டிய ஒரு சில இடங்களை நினைத்து வைத்திருப்போம். அதில் நிச்சயம் இந்த இடத்தினையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
|
சீனச் சுற்றுலா தொடங்கியது காலை சீன வானொலியின் தமிழ் பிரிவுக்கு சென்றேன். அங்கு கடமையாற்றிக் கொண்டு இருந்த துணைத் தலைவர் வாணி உட்பட அனைவரையும் சந்துத்து எனது வணக்கத்தினை வாழ்த்துக்கலையும் தமிழக நேயர்களின் சார்பாகவும் எனது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொண்டேன். அதன் பின் தமிழ் பிரிவின் கலையகங்களைக் காணச் சென்றேன். மிகவும் அருமையாக இருந்தது.
|
|