2000ம் ஆண்டு சின்ச்சியாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 13 ஆயிரம் கோடி யுவானாகும். 2008ம் ஆண்டு இது 42 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. 2000ம் ஆண்டில் விவசாயிகளின் நபர்வாரி வருமானம் 1618 யுனாகும். 2009ம் ஆண்டு இவ்வெண்ணிக்கை 4000 யுவானை தாண்டக் கூடும் என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், சின்ச்சியாங்கில் அடிப்படை வசதிகளின் கட்டுமானம் முக்கியமாக மத்திய அரசு மற்றும் இதர மாநிலங்கள் அல்லது தன்னாட்சி பிரதேசங்களின் நிதியுதவியை சார்ந்திருக்கின்றது. உயிரின வாழ்க்கை கட்டுமானமும் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று Nuer Baikeli கூறினார்.