• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கரியமில வாயுவைக் குறைக்கும் பணிகள்
  2010-01-18 15:16:53  cri எழுத்தின் அளவு:  A A A   

கரி குறைந்த பசுமையான உலகப் பொருட்காட்சியை உருவாக்க சீனா பல பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்களைகளின் மூலம், உலகப் பொருட்காட்சியால் ஏற்படும் 60 முதல் 70 விழுக்காடு வரையான கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படலாம். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அலுவல் ஒருங்கிணைப்பு பணியகத்தின் தலைவர் Hong Hao 18ஆம் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார்.

உலகப் பொருட்காட்சி பூங்காவில், 3 லட்சத்து 80 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய பழைய ஆலை மற்றும் கட்டிடங்கள், காட்சி அரங்குகளாகவும் இதர அடிப்படை வசதிகளாகவும் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது சீனாவில் மிகப் பெரிய சூரிய ஆற்றல் மின்னாக்கிகளும், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் விளக்குகளும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. சீன அரங்கு, உலகப் பொருட்காட்சி மையம், அரங்கேற்ற மையம் உள்ளிட்ட பெரிய ரகக் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு வசதிகள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் அறிமுகப்படுத்தினார். இத்தகைய நடவடிக்கைகளால், உலகப் பொருட்காட்சியால் ஏற்படும் 60 முதல் 70 விழுக்காடு வரையான கரியமில வாயு குறையும் என்று நிபுணர்கள் மதிப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040