
192 நாடுகளும் 50 சர்வதேச அமைப்புகளும் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ள உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வாண்டு மார்ச் திங்கள் இறுதிக்குள் பெரும்பாலான வணிகர்கள் தங்களது காட்சியிடத்தின் ஏற்பாட்டுப் பணியை நிறைவேற்றுவர் என்று அவர் கூறினார்.
"காட்சி அரங்குகளின் கட்டுமானம் நிறைவை நெருங்கியது. காட்சியின் ஏற்பாட்டுப் பணி பன்முகங்களிலும் துவங்கியுள்ளது. உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் திட்டப்பணிக் கட்டுமானத்தில் 90 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
தற்போது, உலகப் பொருட்காட்சியின் அலுவல் ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம், போக்குவரத்து மற்றும் ஏற்பாடு, உணவுப் பொருள் பாதுகாப்பு, சுற்றுப் பயணிகளுக்கான உபசரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான உத்தரவாதத் திட்டங்கள் நடைமுறையாக்கத்தில் இருக்கின்றன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 7 கோடி பயணிகளை ஈர்க்கும் என்றும், ஒவ்வொரு நாளும் 4 லட்சம் பேர் பொருட்காட்சிப் பூங்காவிற்கு வந்து பார்வையிடுவர் என்று மதிப்பிடப்படுகிறது. இது பற்றி Yang Xiong கூறியதாவது—
"பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 5 சுரங்க இருப்புப் பாதைகள் பொருட்காட்சிப் பூங்காவை அல்லது பூங்காவின் சுற்றுப்புறத்தை கடந்து செல்கின்றன. 1000 வாகனங்களுக்கும் 10க்கு மேற்பட்ட சிறப்பு நெறிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் 90க்கு அதிகமான பேருந்துகள் இப்பூங்காவைக் கடந்து செல்கின்றன. 4 லட்சம் பயணிகளின் தேவை நிறைவு செய்யப்பட முடியும்" என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு துறையில், மிகக் கண்டிப்பான, உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, அமைதியான உலகப் பொருட்காட்சியையும் மகிழ்ச்சி தரக் கூடிய உலகப் பொருட்காட்சியையும் உருவாக்கும் என்று ஏற்பாட்டு தரப்பு தெரிவித்துள்ளது.