• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப்பொருட்காட்சியில் பங்கெடுப்பு
  2010-01-18 13:06:59  cri எழுத்தின் அளவு:  A A A   

2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதாக உறுதிப்படுத்திய நாடுகள் மற்றும் அமைப்புகளின் எண்ணிக்கை, அதன் வரலாற்றில் மிக அதிகமாக பதிவாகியது. இதுவரை, 192நாடுகளும் 50 சர்வதேச அமைப்புகளும் இதில் பங்கெடுப்பதாக உறுதிப்படுத்தியுள்ளன. தவிர, சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள 31 நகரங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களும், ஹாங்காங், மகௌ மற்றும் தைவான் பிரதேசங்களும் இதில் கலந்துகொள்ளும். 18ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செயற்குழுவின் துணைத் தலைவர் யாங் சியுங் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இணையதளத்திலான உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள 220க்கு அதிகமான நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040