• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மீதான பெரும் எதிர்பார்ப்பு
  2010-01-21 14:31:07  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளை முன்னிட்டு, இப்பொருட்காட்சி உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. தற்போது, 240க்கு அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இதில் பங்கேற்பதாக உறுதிப்படுத்தியதோடு, இதன் மீது பெரும் எதிர்பார்ப்பை கூறியுள்ளன.

வரலாற்றில் உலகப் பொருட்காட்சியை மிக அதிகமாக நடத்திய நகரம் பாரீஸாகும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, உலகளவிலான ஒரு மாநாடு ஆகும். இதில் பங்கெடுப்பதன் மூலம், பிரான்ஸின் நவீன அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கத் திறனையும் பிரான்ஸின் நகர உயிரின வாழ்க்கைச் சூழலின் தொடரவல்ல வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதோடு, சீன-பிரான்ஸ் இரு நாட்டு மக்களிடை நட்புறவையும் அதிகரிக்கலாம். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் பங்கேற்கும் பிரான்ஸ் பணியகத்தின் தலைவர் Jose Freches இவ்வாறு தெரிவித்தார்.

இப்பொருட்காட்சி, ஜப்பானின் பல்வேறு வட்டாரங்களின் பரந்த கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 10லட்சம் ஜப்பானிய பயணிகள் இப்பொருட்காட்சியைப் பார்த்து ரசிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் இது மூன்றில் ஒரு பகுதி வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன், உலகப் பொருட்காட்சி உருவாகிய நாடாகும். 1851ம் ஆண்டு இலண்டனில் முதல் உலகப் பொருட்காட்சி நடைபெற்றது. இவ்வாண்டின் பொருட்காட்சிக்காக, பிரிட்டன் அதன் அரங்கை சிறப்பாக கட்டியமைத்துள்ளது. புத்தாக்கத் திறன், உருவாக்கத் திறன், புதிய உயர் அறிவியல் தொழில் நுட்பம், இயற்கை உள்ளிட்ட பிரிட்டனின் அனைத்து வகை அம்சங்களும் இங்கே காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிகிறது.

ஸ்விட்சர்லாந்தில், அதன் செய்தி ஊடகங்கள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஆயத்தப் பணிகளில், குறிப்பாக ஸ்விட்சர்லாந்து அரங்கின் கட்டுமானத்தில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. அந்நாட்டு மக்களைப் பொறுத்த வரை, நகர மற்றும் கிராமத்துக்கிடை பரிமாற்றம் என்ற தலைப்பில், நாட்டின் தனிச்சிறப்பியல்பு மற்றும் செல்வாக்கு, சிறந்த வடிவமைப்பு , உயர் அறிவியல் தொழில் நுட்பம் ஆகிய அம்சங்களைக் கொண்ட அரங்கு அவர்களுக்கு பெருமை தரும். இப்பொருட்காட்சியில் பங்கேற்பதன் மூலம், சீன-ஸ்விட்சர்லாந்து உறவின் நிலை மேலும் உயரும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் தலைமைச்செயலாளர் Roberto Balzaretti தெரிவித்தார்.

அமெரிக்கா, வரலாற்றில் உலகப் பொருட்காட்சியை மிக அதிகமாக நடத்திய நாடாகும். இருப்பினும், அமெரிக்கா ஷாங்காயின் இப்பொருட்காட்சியில் அவ்வப்போது கவனம் செலுத்தி வருகிறது. இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக மாறும் என்று இதில் பங்கேற்கும் அமெரிக்க தரப்பின் தற்காலிக தலைமைப் பிரதிநிதி Jose Villarreal தெரிவித்தார்.

தவிர, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி, தென்கொரியா முதலிய நாடுகள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கவனம் செலுத்தியதோடு, இதை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தன.

100 நாட்களுக்கு பிறகு, வரலாற்றில் மிக அதிகமான நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் பங்கேற்கும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அதிகாரப்பூர்வமாக துவங்கும். உலகின் பல்வேறு நாடுகள் பரந்த அளவில் கவனம் செலுத்தி, ஆதரவு அளித்து வருகின்ற இப்பொருட்காட்சி, மிகவும் வெற்றியான தலைசிறந்தவொரு உலகப் பொருட்காட்சியாக மாறும் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040