• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சூரிய எரி ஆற்றல் ஆய்வுத் துறையில் ஈடுபட்ட அறிவியலாளர் யாங் லீயாவ்
  2010-02-04 16:20:56  cri எழுத்தின் அளவு:  A A A   








நண்பர்களே, கடந்த நூற்றாண்டின் இறுதி முதல், எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி முதலிய எரியாற்றல்களின் விலை இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. அதேவேளையில், சுற்றுச்சூழல் மாசுபாடு நிலைமையும் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. மீண்டும் பயன்படுத்தப்பட கூடிய மாசற்ற எரியாற்றலை வளர்ப்பதில் பல்வேறு நாடுகள் மேலும் அதிகமாக கவனம் செலுத்துகின்றன. சீன அறிவியலாளர் யாங் லீயாவ் நீண்ட காலமாக வெளிநாடுகளில் சூரிய எரியாற்றல் மின்கல ஆய்வில் ஈடுபட்டு வருகின்றார். அவர் 18 அறிவுசார் சொத்துரிமை வாய்ந்த பொருட்களைக் கண்டுபிடித்த அறிவியலாளற் ஆவார். 2006ம் ஆண்டு அவர் சீனாவுக்குத் திரும்பி, சங்தாய் சூரிய எரியாற்றல் அறிவியல் தொழில் நுட்பக் கூட்டு நிறுவனத்தை ஆரம்பித்தார்.

எதிர்வரும் 5 முதல் 10 ஆண்டுகளில், சங்தாய் கூட்டு நிறுவனத்தை சூரிய எரியாற்றல் துறையின் முன்னணியில் இருக்க செய்ய பாடுபடுகின்றேன். இவிலக்கு நனவாக்கப்பட்டால் இருந்தால், மிகவும் மனநிறைவு அடைவேன் என்று அவர் கூறினார்.

அண்மையில் யாங் லீயாவ், அமெரிக்க வணிக அமைச்சர் Gary Faye Lockeஉடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சூரிய எரியாற்றல் துறையில் சங்தாய் நிறுவனம் பெற்றுள்ள முக்கிய முன்னேற்றம் மீது Gary Faye Locke மிகுந்த ஆர்வம் காட்டினார். புதிய எரியாற்றல் துறையில் சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பு மேற்கொள்வது பற்றி இரு தரப்புகளும் விவாதித்தன. யாங் லீயாவ் கூறியதாவது

1984,1985ம் ஆண்டுகளில், அமெரிக்காவில் இத்தகைய எரியாற்றலின் எதிர்காலம் மீது சில முன்னோடிகள் ஆர்வம் காட்டியிருந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன், அவர்களது ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட நான் இத்துறையில் ஈடுபட வேணடுமென தாமதமின்றி முடிவு செய்தேன் என்று அவர் கூறினார்.

அப்போது, எண்ணெயின் விலை மலிவான நிலையில் இருந்தது. சூரிய எரியாற்றல், மக்கள் முன்பு மதிப்பிட்டின் படி விரைவாக வளரவில்லை.

1990ம் ஆண்டுகளின் நடுவில், சீனத் திபெத்தில் ஒரு பெரிய சூரிய எரியாற்றல் மின் நிலையத்தைக் கட்டியமைப்பதில் முதலீடு செய்ய பிரிட்டனின் B.P Solar கூட்டு நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதற்காக இக்கூட்டு நிறுவனம் யாங் லீயாவை சீனாவுக்கு அனுப்பியது. அப்போது, சீனாவில் எரியாற்றல் அமைச்சகம் உருவாக்கப்படவில்லை. சூரிய எரியாற்றல் பற்றிய திட்டப்பணி 5 அமைச்சகங்களின் அங்கீகாரம் பெற்று, அவற்றின் கூட்டு நிர்வாகத்தில் சேர வேண்டிய நிலை இருந்தது. அதேவேளையில், அப்போதைய திபெத்தில் மின்னாற்றல் வலைப்பின்னல் நிலைமை பக்குவம் அடையவில்லை. ஆகையால், இந்தத் திட்டப்பணி மேற்கொள்ளப்படவில்லை.

3 ஆண்டுகளுக்கு முன், சே ஜியாங் மாநிலத்தின் சங்தாய் குழுமத்தின் தலைமை இயக்குநர் nan cun huiஇன் அழைப்பை ஏற்று யாங் லீ யாவ் தயக்கமின்றி நாடு திரும்பினார். அப்போது சங்தாய் குழும்ம் சீனாவில் குறைந்து மின்னழுத்த மின்சாதனப் பொருட்களை உற்பத்தி செய்த மிகப் பெரிய தொழில் நிறுவனமாகும். தவிர, சீனாவில் மிக பெரிய 10 அரசு சாரா தொழில் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். புதிய எரியாற்றலின் பெரும் வளர்ச்சியை எதிர்நோக்கி, சங்தாய் குழுமமும் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டது. இந்தப்புதிய துறையில் யாங் லீயாவ் ஒரு உண்மையான நிபுணராவார். அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில், புதிய எரியாற்றல் தொழில், எரியாற்றல் துறையில் மிக அதிக உள்ளார்ந்த ஆற்றலுடைய வளர்ச்சி திசையாக மாறுவது உறுதி என்று அவர் நம்புகின்றார். அவர் கூறியதாவது

இத்துறையில் நீண்டகாலமாக கவனம் செலுத்தியுள்ளேன். நல்ல வாய்ப்பைப் பெறுவது என்னைப் பொருத்த வரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆர்வம் கொண்ட துறையில் ஈடுபடுவது மனநிறைவு தருகின்றது என்று அவர் கூறினார்.

2006ம் ஆண்டு அக்டோபர் திங்கள் சங்தாய் சூரிய எரியாற்றல் அறிவியல் தொழில் நுட்பக் கூட்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. சூரிய எரியாற்றல் மின்கலம் உள்ளிட்டவற்றை இது சிறப்பாக வடிவமைத்து உற்பத்தி செய்கின்றது. உலகில் மிக முன்னேறிய 2வது தலைமுறை மென்சவ்வு படல சூரிய மின்கல உற்பத்தி துறையில் ஈடுபதுவது அதன் இலக்காகும். யாங் லீயாவின் தலைமையில், இந்தக் கூட்டு நிறுவனம் விரைவாக வளர்ந்து வருகின்றது. 2008ம் ஆண்டு, லாபம் பெற துவங்குவதாக இது அறிவித்த்து. அதன் பல்டிக சிலிக்கான் சூரிய கல உற்பத்தி ஆற்றல் 100 மெகாவாட் அடைந்துள்ளது. சந்தையில் நுழைய தயாராக இருந்த போது, சர்வதேச நிதி நெருக்கடி திடீரென நிகழ்ந்தது. யாங் லீயாவ் கூறியதாவது  

2008ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் சந்தையின் தேவைக்கிணங்க நாங்கள் முழு மூச்சுடன் உற்பத்தி செய்திருந்தோம். திடீரென்று, அதே ஆண்டின் 4வது காலாண்டு முதல் 2009ம் ஆண்டின் முற்பாதி வரை, சந்தை தேவை ஒன்றும் இல்லை. அந்நிலைமையை சமாளிக்க வேண்டியிருந்தது. முதலாவதாக, கூட்டு நிறுவனத்தின் ஆற்றலை நிலைநிறுத்த வேண்டும் என்று கருதுகின்றோம் என்று அவர் விவரித்தார்.

நெருக்கடியில் சிக்கியுள்ள சங்தாய் கூட்டு நிறுவனம் ஆய்வு ஆற்றலை வளர்க்க முயற்சி செய்தது. 2009ம் ஆண்டின் பிப்ரவரி, சங்தாய் கூட்டு நிறுவனம் சீனாவின் முதலாவது தொகுதி மென் சவ்வு படல சூரிய மின்கல உற்பத்தி செய்த்து. அது முதல், சீனாவில் சூரிய எரியாற்றல் மின் கலம் உற்பத்தி பல்படிக சிலிக்கான் சூரிய கல முதல் உயர் அறிவியல் தொழில் நுட்பம் கொண்ட மென் சவ்வு படல காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது.

மார்சு திங்கள், நிதி நெருக்கடியின் பின்னணியில் இருந்த போதிலும், சங்தாய் நிறுவனம் 5 கோடி அமெரிக்க டாலரைத் திரட்டியது. செப்டெம்பர் திங்கள் முதல், அதன் உற்பத்தி மீண்டும் சுறுசுறுப்பாக மாறியது.

2015ம் ஆண்டில், மென் சவ்வு படல சூரிய மின்கலம் மூலம் மின்னாற்றல் உற்பத்தி செய்தால், அதற்கு தேவையான செலவு, தற்போது நிலக்கரி மூலம் மின்னாற்றல் செய்வதற்கு சமமாக இருக்கும். அதன் பிறகு சூரிய எரியாற்றல் பன்முகங்களிலும் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதன் விளைவாக, சூரிய எரியாற்றல் தொழில் நிறுவனங்கள் 100 மடங்காக வளர்ச்சி வாய்ப்பை பெறலாம் என மதிப்பிடலாம் என்றார் யாங் லீயாவ். எனவே இத்துறையில் பங்கெடுப்பதற்கு அவர் ஆழ்ந்த மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040