
2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், சீனாவின் 18 மாநிலங்கள், பிரதேசங்கள் மற்றும் நகரங்களின் அரங்குகளின் முக்கிய கட்டமைப்பு, 6ம் நாள் கட்டி முடிந்தது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் சீன உள்நாட்டுப் பணி, முக்கிய காலக் கட்ட சாதனைகளைப் பெறுவதை, இது கோடிட்டுக்காட்டுகிறது.
சீனாவின் 31 மாநிலங்கள், பிரதேசங்கள் மற்றும் நகரங்களின் அரங்குகளின் முக்கிய கட்டமைப்பு, வசந்த விழாவுக்கு முன், கட்டி முடிய வேண்டும். ஏப்ரல் திங்களில் அதிகாரப்பூர்வமாக சோதனை முறையில் அரங்குகள் இயங்க வேண்டும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பணியகத்தின் தலைவர் ஹோங்ஹாவ் அறிமுகப்படுத்தினார்.