
பாகிஸ்தான் உத்தி ஆய்வகத்தின் தலைவர் தன்வீர் அகமட் ஹான் எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை வெகுவாக பாராட்டினார். அவர் கூறியதாவது:
ஷாங்காய், உலகளவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகும். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் உலக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, மைல்கல் முக்கியத்துவம் மிகுந்த நிகழ்ச்சியாகும். பாகிஸ்தான், இவ்வுலகப்பொருட்காட்சி வழங்குகின்ற வாய்ப்புகளை பற்றிக்கொள்ள, இயன்ற அளவில் முயற்சி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
டெய்லி போஃஸ்ட் என்னும் பாகிஸ்தான் செய்தித்தாளின் தலைமைப் பதிப்பாசிரியர் மாக்தூம் பாபருக்கு சீனப்பண்பாடு மிகவும் பிடிக்கிறது. அவருடைய வீடு முழுவது, சீனக் கலைப்பொருட்களால் நிறைந்து காணப்படுகின்றன. டெய்லி போஃஸ்ட் செய்தித்தாளில், நாள்தோறும், சீனா பற்றிய செய்திகளை அவர் வெளியிட்டு வருகிறார். பாகிஸ்தான் அரசும் மக்களும், சீனாவில் கவனம் செலுத்தி வருவதால், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி விரிவான முறையில் கட்டுரை வெளியிட வேண்டுமென்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தலைமையமைச்சர் கிலானி எமது செய்தியாளரிடம் பேசுகையில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றிகரமாக நடைபெறுவதை எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:
உலகப்பொருட்காட்சி மூலம், சீனாவின் வளர்ச்சி, மாற்றங்கள், பண்பாடு, பாரம்பரியம், பொதுக் கருத்து, வரலாறு, நாட்டுப்புற உற்பத்திப் பொருட்கள் முதலியவை, உலகிற்கு எடுத்துக்காட்டும். சீனாவின் வேகமான வளர்ச்சி அறிமுகப்படுத்தப்படும். அதேவேளை, பாகிஸ்தானை பொறுத்தவரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நல்ல வாய்ப்பாக இருக்கிறது. எமது காட்சி அரங்கத்தில், பாகிஸ்தானின் உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள், உணவகங்கள், பண்பாடு தொடர்பானவை, காட்சிக்கு வைக்கப்படும். இதனால், இரு நாடுகளிடை புரிந்துணர்வை அதிகரிப்பதற்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கிலானி தெரிவித்தார்.