• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியும் சுற்றுலா வளர்ச்சியும்
  2010-02-15 19:23:15  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மே திங்கள் முதல் நாள் துவங்கும். மதிப்பீடின்படி இப்பொருட்காட்சி, 7 கோடி பயணியர்களை ஈர்க்கும். சீனாவில் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டோர், உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்க ஆக்கப்பூர்வமாக ஆயத்தம் செய்து வருகின்றனர்.
ஷாங்காய் chunqiu சர்வதேச சுற்றுலா நிறுவனம், உலகப் பொருட்காட்சிக்கு சேவை புரியும் சிறப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் சிறப்புக் குழுவொன்றை உருவாக்கி, உலகப் பொருட்காட்சி பற்றிய சுற்றுலா சேவையை மேம்படுத்தி வருகிறது என்று இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தவிர, பெய்ஜிங்கின் பல சுற்றுலா நிறுவனங்களும் உலகப் பொருட்காட்சியின் போதான சுற்றுலாச் சேவைக்காக, ஆயத்தம் செய்து வருகிறது.
இந்த மாபெரும் நிகழ்ச்சி, ஷாங்காய் மட்டுமன்றி முழு சீனாவின் சுற்றுலா தொழிலை ஊக்குவித்து புதிய உந்து ஆற்றலை வழங்கும் என்று கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040